மரபியல்

581புல்வாய் புலிஉழை மரையே கவரி
சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும்.

புல்வாய் முதலாயின அறுவகையுயிரும் ஒருத்தலென்ன ஆண்பெயர் ஒன்றும் என்றவாறு.

(37)