மோத்தை முதலாகச் சொல்லப்பட்டன யாட்டில் ஆணிற்குரிய வென்றவாறு.
1. `அப்பர்' என்பது இக்காலத்து வீழ்ந்ததுபோலும். `யாத்த' என்றதனால் கடா என்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க. இனிக் குரங்கினை `அப்பர்' என்றலுங் கொள்க. (தொல். பொருள். 602. பேரா.)