மயிலல்லாத புள்ளின் கண் ஆண்பெயர் சேவலென்று கூறப்படு மென்றவாறு. சிறகு என்றது ஆகுபெயர். (49)
1. `மாயிருந்தூவி மயில்' என்றதனான் அவை தோகை உடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க. எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது. (தொல். பொருள்.603.பேரா.) (49)
|