ஆண்பா லுயிரெல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும்; பெண்பாலுயிரெல்லாம் பெண் என்னும் பெயர் பெறும்; அவ்விரு வகைக்கும் அறிகுறி காண்டலான் என்றவாறு. வேழக்குரித் தென்னும் சூத்திர (35) முதலாக இத்துணையும் ஆண் பெயர் கூறினார். இனிப் பெண் பெயர் கூறுகின்றராகலின் அதிகாரப்பட்ட பொருள் சே, கடுவன், கண்டி என்பன சிறப்புச் சூத்திரத்தாகலின் அதற்குரியவெனக் கூறிற்றிலராலெனின், அவற்றுள் கடுவனும் கண்டியும் முன்னரெடுத்தோதப்படும். சே என்பது ஆவினுள் ஆணையே குறித்து வழங்கலின் ஓதாராயினார். ஈண்டு ஓதப்பட்டன பல பொருள் ஒருசொல்லும் ஒருபொருட் பல சொல்லும் என்றுகொள்க. இத்துணையுங் கூறப்பட்டது; வேழத்துள் ஆண், களிறு ஒருத்தல் ஏற்றை எனப்படும். பன்றியுள் ஆண், ஒருத்தல் ஏற்றை எனப்படும்; புல்வாயுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை, போத்து, இரலை, கலை எனப்படும்; புலியுள் ஆண். ஒருத்தல், போத்து , ஏற்றை, எனப்படும்; உழையுள் ஆண், ஒருத்தல், ஏறு, கலை, ஏற்றை எனப்படும். மரையுள் ஆண், ஒருத்தல், ஏறு, போத்து, ஏற்றை எனப்படும்; கவரியுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; கராத்துள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை எனப்படும்; எருமையுள் ஆண், ஒருத்தல், போத்து, ஏற்றை, கண்டி எனப்படும்; சுறவில் ஆண் என்பன. ஏற்றை எனப்படும்; பெற்றத்துள் ஆண், போத்து, ஏறு, ஏற்றை எனப்படும். `எருது காலுறா திளையா கொன்ற' என வருதலின் எருதும் ஆம்; அதிகாரப் புறனடையாற் கொள்க நீர்வாழ் சாதியுள், ஆண் வராற் போத்து வாளைப்போத்து எனவரும், முசுவில் ஆண், கலை எனப்படும்; குரங்கும், ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும்; கடுவன் எனவும் வரும். ஆட்டினுள் ஆண், மோத்தை, தகர், உதள், அப்பர் எனவரும்; புள்ளினுள் மயிலாண், எழால், சேவல், போத்து, ஏற்றை எனப்படும். புள்ளியினுள் ஆணெல்லாவற்றிலும் மயிலல்லாதனவெல்லாம் சேவல் ரற்றை எனப்படும். ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை ஆண்பனை எனவரும். (51)
1. (பாடம்) காண்ப.
|