மரபியல்
596
பிடியென் பெண்பெயர் யானை மேற்றே.
இனிப் பெண் பெயர் உணர்த்துகின்றார் இச்சூத்திர முதலாக.
பிடி என்னும் பெண்பெயர் ஆனையின் மேலது என்றவாறு.
(52)