மரபியல்

602புல்வாய் நவ்வி உழையே கவரி
சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே.

புல்வாய் முதலாகிய நான்கிற்கும் பிணை என்னும் பெண்மைப்பெயர் வழங்குதற்குரித்து என்றவாறு.

(58)