மரபியல்

613குரங்கினுள் ஏற்றைக்1 கடுவன் என்றலும்
மரம்பியல் கூகையைக் கோட்டான் என்றலும்
செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும்
வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும்
குதிரையுள் ஆணினைக் சேவல் என்றலும்
இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்
எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்
முடிய வந்த வழக்கின்2 உண்மையிற்
கடிய லாகா கடன்றிந் தோர்க்கே.

இது அதிகாரப் புறனடை.

குரங்கு முதலாகச் சொல்லப்பட்டவற்றை இப்பெயரான் உலகத்தார் வழங்குதலின் ஈண்டோதிய இலக்கணத்தின் மாறுபட்டு வருவன வழக்கினுஞ் செய்யுளினும் அடிப்பட்டுவரின் வழுவென்று கடியப்படா வென்றவாறு.

(69)

1. (பாடம்) ஏற்றினைக்.

2. அவ்வழக்கு.