மரபியல்

6181பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழப்பெயர்2
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே.

இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு.

(74)

1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்னாது கிழமைப்பெயர் என்றது என்னையெனின், அவைஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரிய அல்ல என்றற்கு; எனவே அரசர்க்காயின் இவை எல்லாம் உரிய என்ப ஆயிற்று.(தொல், பொருள்.628.பேரா.)

2. (பாடம்) துறைக் கிழமைப்பெயர்.