மரபியல்

619ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவி1யும்
யாரும் சார்த்தி அவையவை பெறுமே.

நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப்பெயரும் தத்தந் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி அவையவை வருதல் பெறும் என்றவாறு.

(75)

1. 'உடைத் தொழிற் கருவி' என்பன அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்கும் கருவியும் முதலாயின; அரசர்க்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு நாவாயும் மணியும் மருந்தும் முதலாயின; வேளாளர்க்கு நாஞ்சிலும் சகடமும் முதலாயின. (தொல். பொருள். 629. பேரா.)