மரபியல்

623மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான.

எண்வகை உணவாவன; நெல்லு, காணம்; வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை.

இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு.

(79)