என்றது வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு. (81)
1. பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமும் என்பன அவற்றின் ஒத்தசிறப்பின அன்றி அவற்றுள்ளும் ஒரோ ஒன்று ஒரோ வருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினான் என்பது நிரை காவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்கும் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறு வரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத்தோடுபட்டதே பெருவரவிற்றெனவும் கூறினான். இச் சூத்திரங்களான் என்பது. (தொல். பொருள்.635. பேரா.)
|