மரபியல்

627அந்த ணாளர்க் கரசுவரை வின்றே.

அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில வென்றவாறு.

அஃதாவது மந்திரி புரோகிதனாகியவழிக் கொடியும் குடையும் கவரியும் தாரு முதலாயின அரசராற்பெற்று அவரோடு ஒருதன்மையராகியிருத்தல்.

(83)