மரபியல்

628வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரு மாவும்
மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.

வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்குமுரிய என்றவாறு.

(84)