மரபியல்

630புறக்கா ழனவே1 புல்லெனப்2 படுமே.

என்-னின். ஓரறிவுடையன. புறவயிர்ப் புடையனவற்றைப் புல் என்று சொல்லுவர் என்றவாறு.

அவையாவன; தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலாயின.

(86)

1. `புறக்காழன' எனவே, அல்வழி வெளிறென்பது அறியப்படும். அவை பனையும் தெங்கும் கமுகும் முதலாயின புல் எனப்படும்; இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரம் எனப்படும்; இங்ஙனம் வரையறைகூறிப் பயந்ததென்னை? புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகில்மரம் போல்வன இடையிடை பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உள. (தொல்.பொருள்.640.பேரா.)

2. (பாடம்) புல்லென மொழிப.