இச்சூத்திரம் அவ்விருவகைக்கும் பிற்கூறலிற் காய் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வுறுப்புப்பெயர் அவ்விரு வகைக்கும் பொதுவெனப்படு மென்றவாறு.
தாழை பூவுடைத் தாகலானும் கோடுடைத் தாகலானும் புறவயர்ப்பின்மை யானும் மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை.