மரபியல்

636மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபு வழிப்பட்ட சொல்லி னான.

என்-னின். செய்யுட் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

ஈண்டுச் சொல்லப்பட்ட மரபுநிலையிற் றிரிதல் செய்யுட்கில்லை; மரபு வழிப்பட்ட சொல்லினாற் செய்யவேண்டுதலின் என்றவாறு.

எனவே யாதானும் ஒரு செய்யுளும் ஈண்டோதிய மரபினாற் செய்ய வேண்டும் என்றவாறாம்.

செய்யுட்கில்லை எனவே வழக்கினுட் சில திரியவும் பெறும். அவை சூதுரையுள் ஆணினைப் போத்தென்றல் போல்வன.

(92)