மரபியல்

6381வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான.
என்-னின் ஐயமறுத்தலை நுதலிற்று.

வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் மேலது ; நூலின் நிகழ்ச்சி அவர்மாட்டாதலான் என்றவாறு.

மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லையெனவும் அதனானே வழக்கிற் சிறுபான்மை வருமெனவும் செய்யுள்மரபு ஒழியவரின் அது வழுவாமெனவும் கூறினாராயிற் பாயிரத்துள் `வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலினெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடி' என்றதனோடு மாறுகொள்ளுமோவென ஐயுற்றார்க்கு ஆண்டு வழக்கென்று சொல்லப்பட்டது உயர்ந்தோர் வழக்கினை எனவும் இழிந்தோர் வழக்கு வழக்கெனப்படா தெனவும் கூறியவாறு.

(94)

1. அவரையே நோக்குதல் என்பது அவர் ஆணையான் உலக நிகழ்ச்சி செல்கின்ற தென்றவாறு. எனவே உயர்ந்தோர் எனப்படுவார் அந்தணரும் அவர்போலும் அறிவுடையோரும் ஆயினார் என்பது. (தொல்.பொருள்.647.பேரா)