மரபியல்

643தொகுத்தல்1 விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்
ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே.
என்-னின், வழிநூல் வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், வடமொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

இது வழிநூலா னாயபயன்.

(99)

1. இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இதுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொல்.பொருள்.652.பேரா.)