இதுவுமது. சூத்திரத்திற்படுஞ் சொற்பொருளை விட்டுநீங்குதலின்றி விரிவோடே பொருந்திக் குறித்த சூத்திர முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக் காட்டினானும் பொருந்தியாங்கமையும் பொருணெறியை யுடைத்துக் காண்டிகை யென்றவாறு. விட்டகல்வின்றி விரிவொடு பொருந்தலாவது மிக அகலாமை. இம்மனை நெருப்புடைத் தென்றது சூத்திரப்பொருள்; புகையுடைத்தாதலானென்பது ஏது; அடுக்களைபோலவென்பது எடுத்துக்காட்டு, இவ்வகையினாற் சூத்திரப் பொருளுரைக்க வென்றவாறு. (104)
1. இது மெய்ந்நெறி என்பது சூத்திரத்துச் சொல்லிற்கருதிய பொருள் இலக்கணம். அதனை அவன் வேண்டியாங்குச் சொல்லி முடிப்பின் அல்லது சூத்திரத்துச் சொற்கண் வந்த சொல்லாராய்ச்சியும் , எழுத்தாராய்ச்சியும் அறியவேண்டுவன எல்லாம் சொல்லார் என்பது கருத்து, இதனை ஈற்றுக்கண் வைத்ததனானே வருகின்ற உரையும் இங்ஙனம் விட்டு அகல்வின்றி வருதலுடைத்தெனக் கொள்க. (தொல். பொருள் . 657. பேரா.)
|