மரபியல்

649சூத்திரத் துட்பொரு ளன்றியும்1 யாப்புற
இன்றி யமையா தியைபவை எல்லாம்
ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே.

உரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சூத்திரத்துட் பொருளொழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றி யமையாதனவெல்லாங் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகு மென்றவாறு.

(105)

1. மேற்காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற்கு ஏற்பன எல்லாம் அதிகாரத்தால் கொள்ளப்படும் . அவை ஏதுவும் நடையும் எடுத்துக்காட்டும் சூத்திரம் சுட்டுதலும் என்று இன்னோரன்ன கொள்க.(தொல்.பொருள்.659.பேரா.)