இதுவுமது. உரையாவது, 'மறுதலைக்கடாஅ மாற்றமுமுடைத்தாக, ஐயப்பட்டு நிற்றலு மருண்டு நிற்றலு நீக்கி, தன்னூலானாதல் அப்பொருண்முடிவுறக் கூறின நூலானாதல் தெளிய வொரு பொருளை யொற்றுமைபடுத்து. இதுவே பொருளெனத் துணிதல் உரையிற் கியல்பென்றவாறு. மாற்றமுமுடைத்தாகி யென்ற வும்மையால் விடையு முடைத்தாகி யென்க. (106)
1. மறுதலையும் மாற்றமும் என்பது கடாவிடை; ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கல் ஒருபுடை ஒப்புமையுடைய போலியும் அதற்கு ஒன்றும் இயைபில்லாத பொய்ப்பொருளும் எனப்படும் . ` பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும் ' என்னும் இரண்டு உம்மையும் பொருளில என்று பிறிது பிறிது ஏற்றலும் உருபுதொக வருவதற்கண் என்று பொருள் கூறுதல் போல்வன சூத்திரத்தின் கருத்து அறியாது பொய்யை மெய்யென்று மயங்கிய மருட்கை யெனப்படும் . இவ்விரண்டையும் நீக்கி உண்மை உணர்த்துதல் உரை எனப்படுவதாயிற்றி. நிற்றல் என்பது ` நிற்க அவ்வுரை ' என்றவாறு. (தொல். பொருள். 659. பேரா.)
|