மரபியல்

652சிதைவில என்ப1 முதல்வன் கண்ணே.
(108)

1. சிதைவில என்பது அறிவானே உணர்வல் எனின் எடுத்தோத்துக் களைந்து உய்த்துணர்தல் பயமின்றென்பது. அல்லதூஉம் முதனூற்கு முன்னையதோர் நூலினை இலக்கியமாகப்பெறின் அன்றே முதல்வன்தான் நூலிலக்கணம் செய்வது. (தொல். பொருள். 661. பேரா.)