இஃது உழிஞைத்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) உழிஞை மருதத்துப் புறன் - உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம். முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறிமரபிற்று ஆகும்- அது முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் வரும் தன்மைத்தாகிய நெறியை மரபாக உடைத்து. 'முதல் அரணம்' என்றதனான் தலையும் இடையும் கடையும் என மூவகைப்படுமவற்றுள் தலையரண். அஃதாவது, அரணிற்குக் கூறுகின்ற இலக்கணம் பலவும் உடைத்தாதல். மருதத்திற்கு இது புறனாயவாறு என்னையெனின், வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர்செய்தல் ஆற்றாது உடைந்து மாற்றுவேந்தன் அரண் வலியாகப் போர் செய்யு மாகலானும், அவர் நாட்டகத்தாகலானும், அவ்வழிப் பொருவார்க்கு விடியற்பொழுது காலமாகலானும், அதற்கு இது புறனாயிற்று. நாட்டெல்லையின் அழிப்பு உழிஞையாகுமோ எனின், அது பெரிதாயின் அதன்பாற்படும்; சிறிதாயின் வெட்சியும் ஓதின ஊர்க்கொலை [புறத்திணை.3] யுள் அடங்கும். (8)
1. உழிஞை........புறனே. (9) முழுமுதல்........என்ப. (10) என இதனை இரண்டு சூத்திரம் ஆக்குவர். (நச்சி). 2. பன்னெறி.
|