இது, குறிஞ்சிக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) குறிஞ்சி - குறிஞ்சித் திணைக்குக் காலமாவது, கூதிர் யாமம் என்மனார் புலவர் - கூதிர்க்காலமும் யாமப்பொழுதும் என்று கூறுவர் புலவர். கூதிராவது ஐப்பசித் திங்களும் கார்த்திகைத் திங்களும் யாமமாவதுஇராப்பொழுதின் நடுக்கூறு. (7)
1. 6,7, சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர்.
|