இது, தும்பைத்திணையின் சிறப்பியல் உணர்த்துதல் நுதலிற்று. இது மேலனபோல ஒருபாற்கு மிகுதலின்றி இருவகையார்க்கும் ஒத்த இயல்பிற்றாம்;ஒருவர்மாட்டும் மிகுதல் இல்லை. (இ-ள்) கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை - கணையும் வேலும் படைத்துணையாகக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, இருநிலம் தீண்டா அருநிலை வகையொடு - நீர் அட்டை காலவயப்பட்டு உடலினின்று உயிர் பிரிக்கப்படுமாறு, இருபால்பட்ட ஒரு சிறப்பின்று - இருபாற் படுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது. போன்று ஆடலொத்த பண்பினையுடையது. [இருநிலம் தீண்டா அரு - நீருட் கிடக்கும் அட்டை] (13)
1.மொய்த்தலின் என்றது யாக்கை அற்று ஆடவேண்டுதலின் கணையும் வேலும் அன்றி வாள் முதலியன ஏதுவாகக் கொள்க.பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அலீகன்இற அற்றுழியும் உடம்பு ஆடுதலின் அட்டையாடல் எனவும் இதனைக் கூறுப.(நச்சி.)
|