இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்)பனிஎதிர் பருவமும் உரித்து என மொழிப - (குறிஞ்சித் திணைக்கு) முன்பனிக்காலமும் உரித்தென்று சொல்லுவர். இதனைக் கூதிர்க்காலத்தோடு ஒருங்கு கூறாமையின், அத்துணைச் சிறப்பிற்று அன்றெனக் கொள்க. குறிஞ்சி என்றது அதிகாரத்தான் வந்தது. முன்பனிக் காலமாவது மார்கழித் திங்களும் தைத் திங்களும். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. (8)
|