புறத்திணை இயல்

84மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.

இதுவும், பாடாண்பாட்டிற்கு உரியதொருமரபு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே - மேற்சொல்லப்பட்டனவும் இனிக் கூறுகின்றவும் ஒருவற்குக் காரணமாகி மெய்ப்பெயராகி வரும் பொதுப்பெயரான் அன்றி இயற்பெயரின் பக்கத்து வைத்தனர் நெறிப்பட.

(26)