இதுவும் அது.
(இ-ள்) கலம் என் அளவு இடை அத்து வரும் - கலம் என்னும் அளவுப்பெயர் (குறையொடு புணரும் வழி) இடையில் அத்து வரும். எ - டு: கலத்துக்குறை என வரும். இஃது, `கலன்' என்னும் னகரவீறேல், நிலைமொழி ஒற்றுக்கேடும் வருமொழி ஒற்றுப்பேறும் "அத்தே வற்றே" (புணரியல்-31) என்பதனாற் கொள்ளப்படும். `கலனெனளவு' என ஓதாதது செய்யுளின்பம் நோக்குப் போலும். சாரியை முற்கூறியவதனான், இன்சாரியை பெற்றவழி முன்மாட்டேற்றான் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (26)
|