7. மொழியிறுதி எழுத்துக்கள்

ஒகரம் நகர மெய்யொன்றுடன் ஈறாதல்

72ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே.

இதுவும் வரையறை.

ஒவ்வும் அற்று - ஒகரமும் தானே நின்று ஈறாவதன்றி மெய்யோடு இயைந்து ஈறாகாது. ந அலங்கடை நகர மெய்யோடல்லாத விடத்து.1

(39)

1. (நச் எடுத்துக்காட்டு) நொ கொற்றா `நொ அலையனின் னாட்டை நீ' என வரும்.