இதுவும் மெய்களிற் சிலவற்றிற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின் - அண்ணத்தைப் பொருந்திய பல்லினது அணிய1 இடத்தின் கண்ணே, நாநுனி பரந்து மெய் உற ஒற்ற - நாவினது நுனி பரந்து வடிவை உறும்படி ஒற்ற, தாம் இனிது பிறக்கும் - தாம் இனிதாகப் பிறக்கும், தகாரம் நகாரம் - தகாரமும் நகாரமும். முன்னே ` உறுப்புற்றமைய ' என்று வைத்துப் பின்னும் மெய்யுற2 என்றதனான். எல்லா எழுத்துக்களும் மெய்யுற்ற என்றதனான், எல்லா எழுத்துக்களும் மெய்யுற்றபோதே இனிது பிறப்பதென்பது கொள்க. (11)
1. அடியாகிய இடத்தே. (நச்) 2. த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் உறுப்புற்று அமைய என்று கூறி ஈண்டு மெய்யுற ஒற்ற என்றார். சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன உளவாகலின். (நச்) சிறிது ஒற்றப் பிறப்பன லகார னகாரங்கள்; சிறிது வருடப் பிறப்பன ரகார ழகாரங்கள். ( பாவாணர் )
|