கற்பியல்

189யாறுங் குளனுங் காவும் ஆடிப்
பதிஇகந்து நுகர்தலும் உரிய என்ப.

இது, தலைவற்குங் கிழத்திக்கு முரியதோர் மரபு உணர்த்திற்று.

யாறுங் குளனும் காவும் ஆடி என்பது - விளையாட்டு என்று கொள்க.

உதாரணம்

"அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோ லணிகொள" என்னும் பாலைக்கலியுள்,

"துயிலின்றி யாநீந்தத் தொழுவையம் புனலாடி
மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ1".

(கலித். 30)

என்று தலைவன் பதியிகந்து நுகர்ந்தமை தலைவி கூறியவாறு காண்க.

(50)

(பாடம்) 1. வான் கொல்லோ.