இது, தலைவற்கும் தலைவிக்கு முரியதோர் மரபுணர்த்திற்று. சிறந்தது பயிற்ற லாவது - அறத்தின்மேல் மன நிகழ்ச்சி. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (51)
1. சிறந்தது அறம்பொருள் இன்பத்திற் சிறந்த வீட்டின்பம். சான்ற காமம் என்றார், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. ஏமஞ்சான்ற வாவன வானப்பிரத்தமும் சந்நியாசமும். (தொல். பொருள். 192. நச்சி.)
|