கற்பியல்

191தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி1 இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.

பாட்டி யென்பது பாடினி யென்றவாறு.

தோழி முதலாகச் சொல்லப்பட்ட பன்னிருவரும் வாயில்களாவார் என்றவாறு.

(52)

(பாடம்) 1. பாடினி.