என் - எனின். இதுவுங் காமம் இடையீடுபட்டுழி வருவதோர் பொருள் வேறுபாடு உணர்த்திற்று. மேற்கூறியவாற்றால் காமம் இடையீடுபட்டுழிக் கனாக் காண்டலும் உரித் தென்றவாறு. இது தலைமகற்குந் தலைமகட்கும் உரித்து. "இன்னகை இனைய மாகவும் எம்வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற உலமரல் போற்றா யாகலிற் புலத்தியால் எம்மே". (அகம். 39) என்றது கனாக் கண்டு கூறியது."கேட்டிசின் வாழி தோழி அல்கற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ வாய்த்தரு1 பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனளே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியன் யானே." (குறுந். 30) இது, தலைவி கனாக்கண்டு கூறியது.(3)
1. வாய்த்தகைப்.
|