பொருளியல்

196தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின்.

என் - எனின். நற்றாய்க் குரியதோர் மரபு உணர்த்திற்று.

மேற்சொல்லப்பட்ட கனவு 1தாய்க்கும் உரித்து; உடன்போக்குக் கிளக்கப்பட்டுழி என்றவாறு.

உதாரணம்

`கண்படை பெறேன் கனவ'

(அகம். 55)

என வரும். வேறும் வந்தவழிக் காண்க.
(4)

1. தலைவி போகாமற் காத்தற்குரிய ளாதலானும் அவளை என்றும் பிரியாத பயிற்சியானும் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று.

(தொல். பொருள். 198. நச்சி.)