என்-எனின். தலைமகட்குரியதோர் பொருளுணர்த்திற்று. தலைமகள் வண்ணம் வேறுபட்டுத் தனிமையுறுங் காலைத் தலைமகன் பிரிவைத் தன் உறுப்புக்கள் உணர்ந்தன போலப் பொருந்தும் வகையாற் கூறவும் பெறும் என்றவாறு. உம்மை எதிர்மறை. "தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்". (குறள். 1033) "தண்ணந் துறைவன் தணந்தமை2 நம்மினும் முன்னம் உணர்ந்த வளை". (குறள். 1277) என வரும்.(7)
|