பொருளியல்

200உடம்பும் உயிரும் வாடிய கண்ணும்1
என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக்
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை.

இஃது உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை என்னுற்றன எனக் கூறினல்லது. கிழவோன் உள்வழிப் படர்தல் கிழத்திக்கு இல்லை என்றவாறு.

உதாரணம்

"கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து".

(குறள். 1173)

எனவும்,

"ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட்டது".

(குறள். 1176)

எனவும் வரும்.
(8)

1. காலும்.