என் - எனின். இது தோழி யறத்தொடு நிற்குமாறு உணர்த்திற்று: இதற்குப் பொருள் களவியலுள் தோழி கூற்று உரைக்கின்றுழி உரைக்கப்பட்டது. (12)
1. `அவ்வெழுவகைய' என்றதனால் உண்மை செப்புங்கால் ஏனை ஆறு பொருளினுள் சில உடன்கூறி உண்மை செப்பலும் ஏனைய கூறுங்காலும் தனித்தனி கூறாது இரண்டும் மூன்றும் உடனே கூறுதலும் கொள்க. (தொல். பொருள். 207. நச்சி.)
|