பொருளியல்

244இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்
அவையில்1 காலம் இன்மை யான.

என் - எனின். இதுவும் மேற்கூறப்பட்ட பொருள். பொருள் என்பது அறிவித்தலை நுதலிற்று.

தேவருலகத்தினுங் கடல்சூழ்ந்த வுலகத்தினும், மேற்சொல்லப்பட்ட பொருளில்லாத காலம் இன்மையான் உள் பொருளென்றே கொள்ளப்படும் என்றவாறு.

(52)

1. அவையில் காலம் இன்மையான - அறம் பொருள் இன்பங்களின் நுகர்வு இல்லாததோர் காலம் இன்றாகையால் அவற்றைப் பொருளென்றே கொள்க. (தொல். பொருள். 248. நச்சி.)

ஐந்தாவது பொருளியல் முற்றிற்று.