என் - னின் ,இது அழுகையாமாறும் அதற்குப் பொருளு முணர்த்துதல் நுதலிற்று. இழிவு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் அழுக்கைகுப் பொருளாம் என்றவாறு. இழிவு என்பது - பிறர் தன்னை யெனியன் ஆக்குதலாற் பிறப்பது. இழவாவது - உயிரானும் பொருளானும் இழத்தல் அசை வென்பது - தளர்ச்சி , அது தன்னிலையிற்றாழ்தல். வறுமை என்பது - நல்குரவு. இவை ஏதுவாக அழுகைபிறக்கும் என்றவாறு . இதுவுந் தன்மாட்டுற்றதனானும் பிறர்மாட்டுற்றதனானும் பிறக்கும். " கவலை கூர்ந்த கருணையது பெயரே அவல மென்ப அறிந்தோர் அதுதான் நிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை யழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னிபிறர் அடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களி றூர்ந்த சேவடி தளைத்தி ளைத்தொலிப்பது தளர்ந்தவை நிறங்கிளர் அகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங் கோல்முனைக் கவற்சி அலைக்கண் மாறா அழுகுரல் அரவம் இன்னோர் அன்னவை இயற்பட நாடித் துன்னினர் உணர்க துணிவறிந் தோரே." " இதன்பயம் இவ்வழி நோக்கி அசைந்தனர் ஆகி அழுத லென்ப . " என்பன செயிற்றிய மாகலின் , இவையெல்லாம் இந்நான்கினுள் அடங்குமாறு அறிந்துகொள்க . இதற்குச் செய்யுள் ." ஐயோ எனின்யான்1 புலியஞ் சுவலே அணைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க வல்லேன்2 என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னாதுற்ற அறனில் கூற்றே3 நிரைவளை முன்கை பற்றி வரைநிகழ் சேர்க4 நடத்திசிற் சிறிதே." (புறம் . 255) இது இழிவுபற்றி வந்த அழுகை. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க . (5)
1. (பாடம்) எனயான் 2. உயத்தனன் கொளினே மார்பெடுக் கல்லேன் 3. சூரே. 4. சேர
|