மெய்ப்பாட்டியல்

250மூப்பே பிணியே வருத்த மென்மையொடு
1யாப்புற வந்த இளிவரல் நான்கே.

என்- னின் . இளிவரலாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று.

மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் இளிவரலுக்குப் பொருளாம் என்றவாறு.

இவை நான்குந் தன் மாட்டுத் தோன்றினும் பிறர்மாட்டுத் தோன்றினும் நிகழும்.

உதாரணம்

" தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழிலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று ."

(நாலடி . 14)

என்றது பிறர்மாட்டு மூப்புப்பற்றி இழிப்புப் பிறந்தது.

பிணியென்பது - பிணியுறவு கண்டு இழித்தல் . அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம் .

" மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் துச்சிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல் . "

(நாலடி . 41)

இது உடம்பினை அருவருத்துக் கூறுதல் .

வருத்த மென்பது - தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத்தானும் இழிப்புப் பிறக்கும் என்றவாறு .

உதாரணம்

" செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று . "

(குறள் . 1255)

இது பிறன் வருத்தங் கண்டு இழிப்புப் பிறந்தது .

உதாரணம்

" தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய2
கேளல் கேளிர் வேளாண்3 சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்4
தாமிரந் துண்ணுமளவை5
ஈன்ம6 ரோவிவ் வுலகத் தானே ."

(புறம் . 74 )

இது தன்மாட்டு வருத்தத்தான் இழிப்புப் பிறந்தது .

மென்மை என்பது - நல்குரவு

" அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் . "

(குறள் . 1047)

" இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும் . "

(குறள் . 1044)
என வரும் .

இன்னும் " யாப்புற என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க . அவை நாற்றத்தானுந் தோற்றத்தானும் புல்லியன . இவற்றிற்கெல்லா செய்யுள் வந்தவழிக் காண்க.

(6)


1. புக்கிலை

2. 'யாப்புறவந்த ' என்பது திட்பமுற வந்த என்றவாறு அங்ஙனம் கூறிய மிகையானே வீரம் முதலாயின பற்றியும் இளிவரல்பிறக்கும் என்றவாறு . ( தொல் , பொருள் , பேரா .)

3.(பாடம்) இடர்ப்படத்தீய .

4. வேளன .

5. தணியோர் .

6. மளவையி .

7. னாம.