என்-னின். இது மருட்கை யாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று. புதுமை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினானும் மருட்கைபிறக்கும் என்றவாறு. மதிமை சாலா மருட்கை என்றமையால் அறவுடையார் இப்பொருட் கண் வியவார் என்று கொள்க . புதுமையாவது - யாதொன்றானும் எவ்விடத்தினும் எக்காலத்தினுந் தோன்றாததோர் பொருள்தோன்றியவழி வியத்தல் , அது கந்திருவர் அந்தரம் போவதுகண்டு வியத்தல் போல்வன . பெருமை யென்பது - பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல் . அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும் . சிறுமை என்பது - பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல் . அது ' கடுகின்கட் பல துளை ' போல்வன . ஆக்கம் என்பது - ஒன்றன் பரிணாமங்கண்டு வியத்தல் . அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மரமுதலாயின . ஆகியவழி வியத்தலும் , நல்கூர்ந்தான் யாதொன்று மிலாதான் ஆக்கமுற்றானாயின் , அதற்குக் காரண முணராதான் அது கண்டு வியத்தலும் , இளையான் வீரங் கண்டு வியத்தலுமாம் . பிறவும் உலகத்து வியக்கத்தகுவன எல்லாம் இவற்றின்பாற் படுத்திக் கொள்க . ' இருந்தவேந்தன் ' என்னும் அகப்பாட்டினுள் , ".............. பெருந்தேர்யானும் ஏறியதறிந்தன் றல்லது வந்த வாறு2 நனியறிந்தன்றோ இலனே தாஅய்3 முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்ற4 நின் மொழிமருண் டிசினே . " (அகம். 384) என்றது வியந்தவாறு ." பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாளோர் திருமா பத்தினிக் கமரர்க் கரசன் தமர்வந் தீண்டியவள் காதற் கொழுநனைக் காட்டி அவளொடெம்5 கட் புலங் காண விட்புலம் போயது6 இறும்பூது போலும் அஃதறிந்தருள்7 நீயென . " (சிலப்.பதிகம்) என்றது புதுமை(7) 1. ' மதிமை சாலா மருட்கை ' யென்பது அறிவினை உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் திரிந்து வேறுபடுத்து வருவதென்றவாறு (தொல், பொருள், .. பேரா) 2. (பாடம்)ஏறியதல்லது வந்தவாறு 3. தாவும் 4. இழிமின் இல் என்ற 5. அவளொடு 6. போகியது 7. போலும் அஃதறிந்தருள்
|