என்- னின் . அச்சமாகிய மெய்ப்பாடும் அதன் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. அணங்குமுதலாகச் சொல்லப்பட்ட நான்கினும் பிறக்கும் மாறுபடுதல் அமையாத அச்சம் நால்வகைப்படும் என்றவாறு. பிணங்கல் சாலுமாயின் நடுக்கம் முதலாயின உளவாகா , அவை பிணங்கல் சாலாத வழியே உளதாவ தென்று கொள்க . அவை நாலச்சமும் வருமாறு :- கொலை களவு கட்காமம் பொய் யென்பனவற்றை நிகழ்த்தினவர்க்கு அரசனால் அச்சம் வருதலின் அவனும் அஞ்சப்படும் பொருளாயினான் . உதாரணம்" மையல் வேழ மடங்கலின் நெரிதர உய்விடம் அறியேம் ஆகி ஒய்யெனத் திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாண்மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையின் நடுங்கி . ' (குறிஞ்சிப் . 165 -1 ) எனவரும் , பிறவு மன்ன . (8)
1.அணங் கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும் நிரயப்பாலரும் பிறரும் அணங்குதற் றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் உருமிசைத் தொடக்கத்தனவும் எனப்படும் ... பிணங்கல் சாலா அச்சம் என்றதனான் முன்னையபோல இவை தன்கண் தோன்றலும் பிறன்கண் தோன்றலும் என்னும் தடுமாற்றம் இன்றிப் பிறிது பொருள்பற்றியே வரும் என்பது . ( தொல் , பொருள் , ....பேரா )
|