என்-னின் . பெருமிதமாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று . கல்வியானுந் தறுகண்மையானும் புகழ்மை யானும் கொடையானும் பெருமிதம் நால்வகைப்படும் என்றவாறு. இவை நான்கும் பிறனொருவனின் மிகுத்தவழிப் பிறக்கு மகிழ்ச்சி பெருமிதம் என்று கொள்க. பெருமிதமாவது - தன்னைப் பெரியனாக நினைத்தல். "உறுசுடர் வாளோ டொருகால் விலங்கின் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டாய்- எறிசுடர்வேல் தேங்குலாம் பூந்தெரியல் தேர்வேந்த நின்னொடு பாங்கலா வீரர்3 படை." (புறப்.வெ.7,8) இது வீரம்பற்றி வந்தது.பிறவு மன்ன.(9) .1.(பாடம்)இசைமை. 2. இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமிதம் என்றெண்ணினாள் ; என்னை ? எல்லாரொடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கு என்பது . சொல்லப்பட்ட பெருமிதம் என்பதனால் காமம் பற்றியும் பெருமிதம் பிறக்குமென்று கொள்க . " பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன்தாரே ." என்பது காமம்பற்றிய பெருமிதம் . ( தொல் , பொருள் , ....பேரா)3. (பாடம்) மன்னர்
|