மெய்ப்பாட்டியல்

263அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
மன்னிய1 வினைய நிமித்த மென்ப

என்-னின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

மேற் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் நிலைபெற்ற வினையுடைய நிமித்தமாம் என்றவாறு.

வினை என்பது-கற்பிற்குரிய காரணமாம். இவையெல்லாங் கற்பிற்குரிய கரணத்து.....தற்கு நிமித்தமாம் என்றவாறு.

அன்னவை பிறவுமாவன; நோக்கானை நோக்கி யின்புறுதல் தனி யிடைநகுதல். நோக்குங் காலைச் செற்றார்போல் நோக்குதல். மறைந்துகாண்டல் தற்காட்டுறுத்தல்.

இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின் ஏழாமவத்தை நாண் நீங்கிய காதலிற் றேறுத லொழிந்த காமத்து மிகுதியாகிய பெருந்திணைப்பாற்படும்; ஒத்த காமத்து நிகழாது; எட்டாவது உன்மத்தம் . ஒன்பதாவது மயக்கம்; பத்தாவது சாக்காடு; ஆதலான் நடுவணைந்திணைக்கண் வருவன ஆறு எனக் கூறினார் என்று கொள்க.

(19)


1. ' மன்னிய வினைய' என்பது நடுவண் ஐந்திணைக்கேயுரிய மெய்ப்பாட்டினவை என்றவாறு.; என்னை? கந்தருவ வழக்கம் அல்லனவற்றை மன்னிய காமம் என்னாரன்றே, அஃது இடையறவுபடாதாகலின், எனவே, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் வரையறையின்றி வேண்டியவாறு வரப்பெறும் என்பதாம். (தொல்.பொருள்.267.பேரா)