என்-னின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. கரணநிகழ்ச்சி உயிர்மெலிந்தவிடத்து இன்மையும் உரித்து என்றவாறு. எனவே இயற்கையும் நிகழும் என்றவாறாம். உம்மை எதிர்மறை யாகலால். கரணநிகழ்தல் பெரும்பான்மை. உயிர் மெலிவிடம் என்றமையால் ஐந்தாவது முதலாக இயற்கை நிகழும் என்று கொள்க. அதனானே யன்றே யவ்வழி தெரிந்துடம்படுதல் என ஓதுவாராயிற்றென்க.
|