என்-னின். கைக்கிளைக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள; நடுவணைந்திணை யல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண் என்றவாறு. அவையலங்கடை என்றமையாற் பாடாண்பாட்டிற் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதேல் ஆண்டுப் புகுமுகம் உளதோ வெனின். தலைமகள் காட்சிமாத்திரத்தைத் தனது வேட்கைமிகுதியாற் புகுமுகமாய்க் கொள்ளும் என்க. பிற்கூறிய அவை என்பன களவும், கற்பும்; முற்கூறிய அலை என்பன புகுமுகம் புரிதல் முதலாயின. அவையலங்கடை யவையுமுளவே என மாறிக் கூட்டுக.
|