மெய்ப்பாட்டியல்

270நிம்பிரி கொடுமை வியப்பொடு2புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை யின்மை என்மனார் புலவர் .

என்-னின். இது தலைமக்கட்காகாத குணம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

நிம்பிரி என்பது-அழுக்காறு அவ்வியம் என்பதும் அது.

கொடுமை என்பது-அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி

வியப்பென்பது-தம்மைப் பெரியராக நினைத்தல்.

புறமொழி என்பது-புறங்கூறுதல்.

வன்சொல் என்பது-கடுஞ்சொற் கூறல்.

பொச்சாப் பென்பது-தம்மைக்கடைப்பிடியாமை.அது சோர்வு.

மடிமை என்பது-முயற்சி யின்மை.

குடிமையின்ந்புறல் என்பது-தன்குலத்தினானுந் தன்குடிப் பிறப்பினானுந் தம்மை மதித்து இன்புறுதல்.

ஏழைமை என்பது-பேதைமை.

மறப்பு என்பது - யாதொன்றாயினுங் கற்றதனையுங் கேட்டதனையும் பயின்றதனையும் மறுத்தல் , ஒடு எண்ணின்கண் வந்தது .

ஒப்புமை என்பது- ஆண்பாலாயினும் பெண்பாலாயினுந் தான் காதலிக்கப் பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ளநிகழ்ச்சி . அது உலகின்கட் கீழ்மக்கள் மாட்டுங் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்காகாதென விலக்கப்பட்டது .

என்றிவை யின்மை யென்மனார் புலவர் என்பது - இச் சொல்லப்பட்டன இல்லையாதலும் வேண்டும் ; மேற்சொல்லப்பட்டவற்றோடுங் கூட்ட என்றாவாறு.

மேற்சொல்லப்பட்டவற்றொடு கூடுதல் அதிகாரத்தான் வந்தது .

இவ்விரண்டு சூத்திரத்தானும் ஒருமுகத்தானாய இலக்கணங் கூறியவாறு.

(26)


1. பிறப் பென்பது குடிப்பிறத்தல்; அதற்குத்தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்......உருவு நிறுத்த காமவாயில் என்பது, பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்று மேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு என்றவாறு. (தொல். பொருள். 273. பேரா.)

1. வியப்பு - தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந்தோழுகுதலும் , குணத்தின் மேற்கொண்டு தன்னை வியத்தலும் ......... வன்சொல் . கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொல் ........ ஏழைமை நுழைந்த உணர்வினர் அன்றிவரும் வெண்மை .............. (தொல் . பொருள் 274 . பேரா.)