என்-னின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஓரோவொரு பொருளான் வருதலின்றி இரண்டும் பலவும் விரவியும் வரும் மரபினுடைய என்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. "இலங்குபிறை யன்ன விலங்குவால்2 வையெயிற்று" (அகம்.கடவுள் வாழ்த்து) என்றவழி வடிவும் நிறனும் விரவிவந்தது . பிறவும் அன்ன . இன்னும் " விரவியும் வரூஉம் மரபின " என்றதனாற் பலபொருள் விரவிவந்தது." அடைமரை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ " (கலித் . 84) என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும புதல்வற்கும் உவமையாயினும் தோற்றத்திற் கிரண்டும் ஒருங்குவந்தமையான் வேறோதப்பட்டது . இன்னும் ' விரவியும் வரூஉம் மரபின " என்றதனால் தேன்மொழி ' எனத் தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும் மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலுங் கொள்க . பிறவும் இந்நிகரனவெல்லாம் இதுவே ஒத்தாகக் கொள்க. (2)
1.'மரபின' என்றதனான் அவை அவ்வாறு விராய் வருதலும் மரபே; வேறு வேறு வருதலே மரபெனப்படாதெனக் கொள்க.(தொல். பொருள்.277. பேரா.) 2.(பாடம்) விளங்குவால்.
|