உவமையியல்

276கிழக்கிடும்1 பொருளோ டைந்து மாகும்

என் - னின் . எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட சிறப்பு முதலிய நான்கும் ஒழியத் தாழ்ந்த பொருளொடும் உவமை பொருந்துமிடத்து உவமிக்கப்படும் அதனோடுங்கூட ஐந்தாம் என்றவாறு.

என்றது பொருள் உவமமாயும் உவமம் பொருளாயும் நிற்குமிடமும் உள என்றவாறு.

" ஒண்செங் கழுநீர்க் கண்போ லாயித
ழுசி போகிய சூழ்செயன் மாலையன். "

(அகம் . 48 )

என்றாற் போல்வன . மேற்சொல்லப்பட்ட நான்கும் உயர்வின் பகுதியாதலின் இதனொடுங்கூட ஐந்தென்றார்.

1. இவை பொருளன்றி உவமையும் கிழக்கிடப் பட்டனவால் எனின் , அங்ஙனமாயினும் அவை பொருளோடு சார்த்திநோக்க உயர்ந்தன எனப்படும் . ( தொல் பொருள் . 280 . பேரா . )